காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புதிய திருத்தேர் செய்யும் திருப்பணியினை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் பணியினை பூஜை செய்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் திருப்பணியினை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் ஏற்கனவே உள்ள திருத்தேர் 100 ஆண்டு கால பழமை வாய்ந்தது. பழைய திருத்தேருக்கு மாற்றாக சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26-ன்படி புதிய திருத்தேர் திருப்பணிக்காக ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் உபயதாரர் நிதிமூலம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிய திருத்தேர் செய்யும் பணிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர்கள் பூஜை செய்து திருத்தேர் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
புதிய திருத்தேர் செய்யும் பணிகள் அடுத்த ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என்றும், பணிகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை, திருக்கோவில் செயல் அலுவலர்கள் சீனிவாசன், செந்தில்குமார், மாநகராட்சி வார்டு உறுப்பினர் கமலக்கண்ணன், திருப்பணி சபதி கதிரவன் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை