காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்தரமேரூர், திருபெரும்புதூர், ஆலந்தூர், உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டார்.
அதன்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 13,55,188 மொத்த வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்களாக 6,58,818 லட்சம் பேரும் பெண் வாக்காளர்களாக 6,96,156 லட்சம் பேரும் இதர வாக்காளர்களாக 217 பேர் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 3,88,579 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2,67,927 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
செய்தியாளர் :தினேஷ்
கருத்துகள் இல்லை