காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் முதல்வர் வெங்கடேசன் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் கே.ஆர். வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றிய விரிவாக்க பட்டிமன்ற பேச்சாளர்கள் ஷர்மிளா, தமிழ்வாணன், நர்மதா, அய்யம்மாள், வெற்றி, சுபாஷினி ஆகியோர் மாணவ - மாணவிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தினர். சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் மரங்களை வளர்க்க வேண்டும் மரங்கள் வளர்ப்பதினால் கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்ட ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீ த லீடர்ஸ் காஞ்சிபுரம் பொறுப்பாளர்கள் கே.எஸ்.பாபு, ராஜகுமாரி, காஞ்சி ஜீவானந்தம், வெங்கடேசன் மற்றும் வீ த லீடர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவ - மாணவிகளுக்கு மரக்கன்றுகள், சங்கரன் கலைக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ - மாணவிகளுக்கு பயனுள்ளதாகவே அமைந்தது.






கருத்துகள் இல்லை