கடம்பாக்குடியில் ஆற்று மணல் கொள்ளை - லாரி பிடிபட்டது - டிரைவர் தப்பி ஓட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடம்பாக்குடி பகுதியில் அனுமதியின்றி டாரஸ் லாரியில் ஆற்று மணல் கொள்ளை நடப்பதாக கடம்பாக்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது எர்சாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அனுமதியின்றி டாரஸ் லாரியில் ஆற்றுமணலை இறக்கி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேட்டனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் குப்புராஜு (35) என்பதும், அறந்தாங்கி வெள்ளாற்றில் எவ்வித அனுமதியும் இன்றி டாரஸ் லாரியில் ஆற்று மணல் அள்ளி வந்து சம்பவ இடத்தில் இறக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளி வந்த டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் குப்புராஜுவை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை