• சற்று முன்

    வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25) அதேபகுதியை சேர்ந்தவர் ஷாலினி ( 22) ரஞ்சித்குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். 

    இந்த நிலையில் ரஞ்சித்குமாரும், ஷாலினியும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் ஷாலினியின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரிய வந்தது தொடர்ந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் ஷாலினிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்தனர்

    இதனால் ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் தொடர்ந்து இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர் இந்த நிலையில் பெண்ணின் தரப்பினர் ரஞ்சித் குமாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

    தொடர்ந்து அவர்கள்  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்மனுவை வாங்கிய போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.. 

    செய்தியாளர் : ராணிபேட் ஆர். ஜே.சுரேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad