கோவில்பட்டியில் விதிகளை மீறி இயக்கிய தனியார் பேருந்து பறிமுதல்
கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 27 மினிபஸ்கள் பறிமுதல் - வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை
கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவில்பட்டி பகுதியில் 31 மினிபஸ்கள் இக்கப்பட்டு வரும் நிலையில், மினிபஸ்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட அதிக கட்டணம் வசூல் செய்து வருவதாகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு வழிதடத்தில் முழுமையாக இயக்கமால், வழித்தடங்களை மீறி இயங்கி வருவதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் வந்த புகாரினை தொடர்ந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன் தலைமையில் அலுவலகர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 27பஸ்களை பறிமுதல் செய்து, வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்; மன்னர்மன்னன் கூறுகையில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை தொடர்ந்து ஏற்கனவே மினிபஸ் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 27 மினிபஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை