ராள்ளகொத்தூர் ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராள்ளகொத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா அதிவிமரிசையாய் நடைபெற்றது.
ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கோவிலில் கோ பூஜை, ஸ்ரீ வைஜயந்தி சமேத, மகா சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, அனுக்ஞை, பகவத் வாசுதேவ புண்யாவாசனம், மிருத்சங்கரணம், வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது
2-ம் கால பூஜை, தீர்த்த சங்கிரஹணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம் சாற்றுமுறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றன.ஞாயிற்றுக்கிழமை காலை வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் வெங்கடசமுத்திரம், ரங்காபுரம், அத்திம குலப்பள்ளி, கரும்பூர், மிட்டாளம் தேவலாபுரம் மற்றும் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஜெய் வீர ஆஞ்சநேயா, ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் என ஸ்ரீ ராம மந்திரம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.






கருத்துகள் இல்லை