நாமக்கல் பூங்கா சாலையில் 11- அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத, விவசாயிகள் விரோத, நடவடிக்கைகளை கண்காணித்து 11- அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 25.8.2026 அன்று மாலை 4.00 -மணியளவில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் P.தனசேகரன் AITUC மாவட்ட பொது செயலாளர், N.வேலுசாமி CITU மாவட்ட செயலாளர், N.வெங்கடேசன் AICCTU மாவட்ட செயலாளர், PV.சிவகுமார் AIKS மாவட்ட தலைவர், C.துரைசாமி அ.இ.வி.தொ.சங்கம் மாவட்ட செயலாளர், P.பெருமாள் த.வி.சங்கம் வட்டார தலைவர், D.சரவணன் DYFI மாவட்ட செயலாளர், M.தங்கராஜ் SFI மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை வகித்தனர்,
ஆர்ப்பாட்டத்தில் AITUC போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில செயலாளர் தோழர் N.முருகராஜ் , AITUC கட்டிட சங்க மாவட்ட செயலாளர் தோழர் A.குமார் மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.,
கோரிக்கைகள்
1. இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்போம் .
2. தொழிலாளர்
நல சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் .
3. விவசாய விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், விவசாயத்தையும் விவசாயிகளை யும் பாதுகாத்திட வேண்டும்.
4. வேலையில்லா திண்டாட்டம் தை போக்க வேண்டும்.
5. ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும்.
6. பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் .
7. பெண்களுக்கு 33- சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
8. நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.9. கல்வி வணிக மயமாவதை தடுத்திட வேண்டும்.
10.பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யாதே.
11.தமிழ் மொழி , பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாத்திட வேண்டும்.






கருத்துகள் இல்லை