மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்
காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள் கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






கருத்துகள் இல்லை