காஞ்சிபுரத்தில் மகளிர்களால் நடத்தப்படும் பெண்களுக்கான வணிக கண்காட்சி காஞ்சி கிராண்ட் எஸ்போ 2026.
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆகஸ்ட் 1 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்கள் மகளிர்களால் நடத்தப்படும், மகளிர்களுக்கான மாபெரும் வணிக கண்காட்சியான காஞ்சி கிராண்ட் எஸ்போ 2026 திறப்பு விழா நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மகளிர்கள் தங்கள் வீட்டிலிருந்து செய்யும் சிறு வணிகத்தை பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி அவர்களின் வணிகம் வளர்ச்சி பெறுவதற்காகவே இந்த கண்காட்சியில் கடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வணிக கண்காட்சியில் பொதுமக்களுக்கு தேவையான வளையல்கள், ஆடைகள், ஹேண்ட் பேக், மசாலா பொடி வகைகள், செடி வகைகள், அழகு சாதன பொருட்கள், ஜூவல்லரி, ஆண்களுக்கான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள், பெண்களுக்கு தேவையான ஆடை மற்றும் அணி கலன்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, ஸ்னாக்ஸ், குளிர்பான வகைகள், புட் கோர்ட் போன்றவைகள் ஸ்டால்களில் இடம் பெற்றுள்ளன.
சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களில் இந்த கண்காட்சி காஞ்சிபுரம் நகர மக்களுக்கு சிறந்த பொழுது போக்காய் அமையும். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை டி. டி. எஜூகேஷன் அகாடமி நிறுவனர் முனைவர் எம். துர்காதேவி, ரோஸ் பொட்டிக்யூ உரிமையாளர் டி. சரண்யா, காஞ்சி வெஜ்ஜி சப்பர்ஸ் உரிமையாளர் கே. பி. சந்தியமாய், தர்சன் டிவி உரிமையாளர் வி. பத்மநாபன் மற்றும் குழுவினர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த கண்காட்சியினை காண வரும் பொதுமக்களுக்கு குலுக்கள் முறையில் தினமும் 50 நபர்களுக்கு வெள்ளி நாணயம் மற்றும் பரிசும் வழங்கப்பட உள்ளது.






கருத்துகள் இல்லை