• சற்று முன்

    காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்


    காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம் 12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது.


    காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    செய்தியாளர் : விஜய் ராஜா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad