காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (04-09-26) வெள்ளிக்கிழமை உத்திரமேரூர் அடுத்துள்ள மல்லியங்கரணை பிரியா மகாலில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டல்திற்கு திமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட கழக மறுசீரமைப்பு பிரதிநிதிகள் மருது கணேஷ்,இராணி ரவிசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்-மாவட்ட துணை செயலாளர் க.செல்வம்,மாவட்ட பொருளாளர் சனீபிராண்ட் கே.ஆறுமுகம்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி,மாநகர செயலாளர் சி.கே.வி.க
தமிழ்செல்வன்,ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், பி.சேகர், டி.குமார், பி.எம்.குமார், க.குமணன், படுநெல்லி பி.எம்.பாபு,பேரூர் செயலாளர்கள் என்.எஸ்.பாரிவள்ளல்,என்.பாண்டியன்,பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன்,மாநில தொண்டரணி செயலாளர் சுகுமாரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்,துணை அமைப்பாளர்கள் சஞ்சய் காந்தி, மணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.






கருத்துகள் இல்லை