• சற்று முன்

    உலக நன்மைக்காக சஹஸ்ர கலச அபிஷேகம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி நடைபெற உள்ளது

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக போற்றப்படும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 92 ஆவது ஜெயந்தி விழா 31.7.26 அன்று விமர்சியாக ஸ்ரீ மடத்திலும்  மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முகாமிட்டுள்ள ஓரிக்கை மணி மண்டபத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. 

    குறிப்பாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை ஒட்டி மணிப்பூர் மாநிலத்தின் தலை நகரான இம்பால் நகரத்தில் உள்ள கோவிந்த ஹரி மந்திர் வளாகத்தில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு 1000 கலசங்கள் கொண்டு உலக நன்மைக்காக சஹஸ்ர கலச அபிஷேகம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி நடைபெற உள்ளது. 30.7.26 முதல் வேத பாராயணம் பாகவத உபன்யாசம் சண்டி மஹா யாகம் மற்றும் சர்வ தேவதா யாகம் ஆகியன நடைபெற இருக்கின்றன. இவற்றை சென்னையில் இருந்து இம்பால் சென்றுள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த 40 வேத விற்பன்னர்கள் நடத்தி வைக்க உள்ளனர். உலகில் போர் மேகங்கள் நீங்கி மழை பொழியவும் சுபிக்ஷமாக வாழவும் இந்த வைபவங்கள் நடத்தப்படுகின்றன என்று ஸ்ரீ சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad