விஷ்வ இந்து பரிஷித் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பசுக்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசு பாதுகாப்பு பேரியக்கம் மற்றும் விஷ்வ இந்து பரிஷித் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ள பசுபாதுகாப்பு பேரியக்கம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பசுவதை பாதுகாக்க வேண்டும் பசுக்களை கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும், மேலும் பக்ரீத் பண்டிகை நாட்களில் வயிற்றில் கன்றுடன் உள்ள சினைபசுவை கொலை செய்வதை தடுக்க வேண்டும், பாட புத்தகத்தில் நாட்டு பசுவின் வகைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் அதன் பெருமைகளையும் புதுப்பித்து பள்ளி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும், மேலும் பசுக்களை நோயின்றி பாதுகாக்க சாலை ஓரங்களில் விடுவதை தடுத்து பசுக்களை நோயின்றி பாதுகாத்தல் வேண்டும் ,மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பசுக்களை வாங்கியோ கடத்தி வந்தோ உணவுக்காக வதைப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டித்து பசுக்களை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இது தொடர்பாக பொதுமக்களின் கையெழுத்து பெற்ற மனுவை பசு பாதுகாப்பு பேரியக்கம் அமைப்பாளர் மணி மற்றும் வட தமிழகத்தின் தர்மாச்சாரியா அமைப்பாளர்
ஆம்பூர் ஓம் சக்தி லயன் ஜீ.பாபு ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் நடராஜன், விஷ்வ ஹிந்து பரிஷத் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்.பிரபு மற்றும் பஜ்ரங்கன் அமைப்பாளர் சசிகுமார், ஜெயின் சமூகத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.






கருத்துகள் இல்லை