• சற்று முன்

    அடிப்படை வசதிகள் செய்ய கோரி காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு அளித்தார்.



    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் சமீபத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை மரட்டியக்காரத்தெரு மற்றும் பி.கே. செட்டி தெரு பகுதியில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தரமற்றதாகவும் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் சேதமடையும் அளவிற்கு காணப்படுவதாக வாலாஜாபாத் பேரூராட்சி 12வது வார்டு கீதாதேவிஅரிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு அளித்தார். 

    இதனால் வாலாஜாபாத் பேரூராட்சியில் பல்வேறு திட்டங்கள் அமைக்கும் பணியில் ஊழல் நடைபெறுவதாகவும் அவற்றை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு தரமான சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  

    மேலும் வாலாஜாபாத் பேரூராட்சி 14வது வார்டு உறுப்பினர் அரிக்குமார் தங்கள் பகுதியில் எல் இ டி மின் பல்புகள் அமைக்க படாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இரவில் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் ஏற்படுவதாகவும் அதிமுக கவுன்சிலர் என்பதால் தங்கள் பகுதியை புறக்கணித்துவிட்டு மற்ற அனைத்து பகுதிகளுக்கும் எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

    அவை தரமற்ற முறையில் காணப்படுவதாகவும் இவற்றை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து விரைவில் தங்கள் பகுதிக்கு தரமான எல்இடி பல்பு கம்பங்கள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு அளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad