• சற்று முன்

    திருப்பெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.76.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்கள்.

     


    மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திருப்பெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.76.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்கள்.


    மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (28.07.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் ரூ.76.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்கள்.


    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப் பணியாளர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 120 களப்பணியாளர்களும், 48 சிறப்பு பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர். திருப்பெரும்புதூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மட்டும் 16 சிறப்பு பயிற்றுநர்கள் பணிபுரிய உள்ளனர். மேலும் களப்பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்து பின்னர் அவர்வர் மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் தேவைப்படும் நலத்திட்டங்கள் பெற்றுத்தர உரிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 ஒன்றிய அளவிலான ஒருங்கிணைந்து சேவை மையங்களும், 2 கோட்ட அளிவலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் உள்ளது. தற்போது 4 வட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மார்ச்- 2026 முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள ஒருங்கிணைந்த சேவை மையங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிள்றது. அனைத்து விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் 70 வயதிற்குட்பட்ட அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேவைப்படும் பயிற்சிகள் மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் பேச்சுப்பயிற்சி மற்றும் மொழிப்பயிற்சி, தசைப்பயிற்சிக்கூடம், செவித்திறன் ஆய்வு, உடற்பயிற்சி சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குதல் என அனைத்தும் உதவிகளும் ஒரு குடையின் கீழ் வழங்கப்பட உள்ளது.

    தற்போது தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் (பழைய கோர்ட் அலுவலகம்) ரூ46.75 இலட்சம் மதிப்பீட்டில் கோட்ட அளவிலான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடம் சீரமைப்பு மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சி உபகரண கருவிகள் ஆக மொத்தம் ரூ.76.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள கட்டிடத்தை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியினை பார்வையிட்டார்கள்.  

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமைகள் திட்ட களப்பணியாளர்களை கொண்டு மொத்தம் 17586 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது செயல்படவுள்ள இம்மையத்தில் திருப்பெரும்புதூர் கிராமம் மற்றும் நகரம், மாங்காடு, குன்றத்தூர் நகரம் மற்றும் கிராமம் ஆகிய பகுதிகளை சார்ந்த 4500 -க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேற்க்குறிப்பிட்ட பயிற்சிகளை இலவசமாக பெற்று பயனடையலாம். இம்மையம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்

    ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கிடைக்கப்பெறம் மறுவாழ்வு உதவிகள்: இயன்முறை மருத்துவம்: பக்கவாதம், நடுக்கு,வாதம் முதுகு தண்டுவடம் பாதிப்பு, உடல் உறுப்பு நீக்கம், பெருமூளை வாதம், தசை சிதைவு, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, தண்டுவட நரம்பு பாதிப்பு, அனைத்து உடல் வலிகள். பார்வை குறைபாடுகளை கண்டறிதல்: குறைந்த பார்வை, குறுக்குக்கண், சுற்றுப்பாதை நிறை, கண்விலத்தல், சுருங்கிய கண், உளவியல் ஆலோசனை: மன அழுத்தம், மனச்சோர்வு, நடத்தை சிக்கல்கள், அறிவாற்றல் குறைபாடுகள். சிறப்புக் கல்வி: அறிவுசார் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மனநளிவு நோய், பேச்சு மற்றும் மொழி திறன் குறைபாடு, மொழி மற்றும் பேச்சுப் பயிற்சி: செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, காது இரைச்சல், தலைச்சுற்றல், மயக்கம், செவிப்புலன் செய்லாக்க கோளாறுகள்.

    செயல்முறை மருத்துவம்: நரம்பியல் கோளாறுகள், எலும்பும் மற்றும் தசை கோளாறுகள், குறைந்த நலம் மற்றும் வளர்ச்சி தாமதங்கள் போன்ற அனைத்து உதவிகளும் இம்மையத்தில் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் நகரமன்ற தலைவர் திருமதி.சாந்தி சதீஷ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.ச.சோமசுந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி, மைய மேலாளர் திருமதி.ராணி, மறுவாழ்வு திட்ட மேலாளர் திரு.அனிபா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad