கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 57 வது மாதம் அன்னதானம் வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது.
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 57 வது மாதம் அன்னதானம் வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இதன் தொடர்ச்சியாக இன்று 57 வது அன்னதானம் வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான லவ ராஜா அனைவரையும் வரவேற்றார். ஜீவா அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், சிவந்தி ஆதித்தனார் மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் தர்மராஜா தலைமை வகித்தார். நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் பொங்கல் பிரசாதம் வழங்கினார். கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி அவர்கள் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக.. தொழிலதிபர்கள் அருண் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் மாடசாமி, நகர் மன்ற உறுப்பினரும், லட்சுமி டெக்கரேஷன் உரிமையாளருமான சண்முகவேல், ஜே ஆர் எஸ் ஸ்வீட்ஸ் ஹரிராம் சேட், சங்கர் மேட்ச் கம்பெனி கொல்லம் சேகர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆசிரியர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.. மேலும் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், எஸ் பி பாண்டியன், பஜனை நர்த்தனாலயா கணபதி, ஆக்ரா காளிராஜ், பசுமை இயக்கம் செந்தில், ஆசிரியர்கள் ஆனந்த செல்வன், மைக்கேல், வேலாயுதபுரம் சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. லட்சுமி நாட்டு மருந்து கடை பெரியசாமி நன்றி கூறினார்.. அன்னதான ஏற்பாடுகளை பெரியசாமி குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.






கருத்துகள் இல்லை