ஊராட்சிகளின் நிதியை முறைகேடாக செலவிட்டதால் நான்கு பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, மாவட்ட சினேகா உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சிகளின் நிதியை முறைகேடாக செலவிட்டதால் வேண்பாக்கம், வைப்பூர் ஆகிய இரு ஊராட்சி பெண் தலைவர்கள், இரு துணை தலைவர்கள் என, நான்கு பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, மாவட்ட சினேகா உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு வரும், மத்திய, மாநில அரசுகளின் நிதியை ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், கடவு சொல்லை பயன்படுத்தி வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றனர்.
அதிக நிதி செலவிடுதல், நிர்வாகத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எழும் புகார்களுக்கு, ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட நடவடிக்கை எடுக்கலாம் என, ஊராட்சிகள் விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், வேண்பாக்கம் ஊராட்சி மற்றும் குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி நிர்வாகங்களில் நிதி முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இரு ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி துறையினர், ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில், நிதி முறைகேடு நடந்ததாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட சினேகா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, வேண்பாக்கம் ஊராட்சி தலைவர் சரளா, துணைத் தலைவர் அருள் ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். வைப்பூர் ஊராட்சி தலைவர் சுமதி, துணைத் தலைவர் பாரதிராஜா ஆகிய இருவர் என, மொத்தம், நான்கு பேரை பதவி நீக்கம் செய்து, மாவட்ட சினேகா உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நடவடிக்கை, 1994ம் ஆண்டு ஊராட்சிகளின் சட்டப்பிரிவு 205 (11)ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி செலவினங்களை ஊராட்சிகளின் சட்ட விதிகள் மற்றும் வழி காட்டுதல்களை மீறி நிதியை எடுத்து செலவு செய்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இரு பெண் ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் ஆகிய நான்கு பேர் பதவியை, காஞ்சிபுரம் மாவட்ட சினேகா பறித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி நீக்கப்பட்ட வேண்பாக்கம் ஊராட்சி தலைவர், வைப்பூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் எனவும், வேண்பாக்கம் துணைத் தலைவர் மட்டும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.






கருத்துகள் இல்லை