• சற்று முன்

    தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிதி அலுவலகம் நல அறக்கட்டளை சார்பில் 9 ஆம் ஆண்டு பள்ளி முதலிடம் மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கும் விழாநடைபெற்றது


    தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிதி அலுவலகம் நல அறக்கட்டளை சார்பில் 9 ஆம் ஆண்டு பள்ளி முதலிடம் மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ஹோட்டல் அசோகாவின் நடைபெற்றது

    தலைவர் P.  சாந்தகுமார் தலைமையில் செயலாளர் K. பாலசுப்பிரமணியன் துணைத் தலைவர் ராஜாராம் பொருளாளர் R. குரு பிரசாத் ஒருங்கிணைப்பாளர்கள் P. கோடீஸ்வரன், ஸ்ரீராம்,  c. சத்தியமூர்த்தி  P. ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது 


    இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஜி அழகர்சாமி சுஜாதா வெங்கடேசன் V. விஜய மோகன்,  M. சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களை ஊக்குவிக்கும்  வகையில் சிறப்புரை ஆற்றினார்கள்.  10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 100  மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5,000 மற்றும்  சான்றிதழ் வழங்கினார்கள் 



    மேலும் மாற்றுத்திறனாளிகளான காதுகேளார், பார்வையற்றோர் ஆகிய மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது எம்ஜிஆர் காது கேளார்  அரசு பள்ளி ராமாபுரம் ,அரசு மேல்நிலைப்பள்ளி கன்னிகாபுரம், லிட்டில் பிளவர் கான்வென்ட் கிரீன்வேஸ் சாலை, அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது



    இந்த விழாவில் 250 க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் இறுதியாக மாலை 6 மணி அளவில் சிற்றுண்டி வழங்கப்பட்டது நன்றியுரை எஸ் ராமகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad