• சற்று முன்

    அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் மாரியம்மன் மூன்று ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


    ஆம்பூர் அடுத்த வெங்கடாசமுத்திரம் ஊராட்சி ரங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் மாரியம்மன் மூன்று   ஆலயத்தில்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

     திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்த வெங்கடாசமுத்திரம் ஊராட்சி ரங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் மாரியம்மன் மூன்று   ஆலயத்தில்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



    இதையொட்டி காலை மங்கள வாத்தியத்துடன் கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலை ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, கடம் புறப்பாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து காலை விநாயகர் பாட்டைசாரதி அம்மன் மாரியம்மன் மூன்று ஆலயத்தில் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேதும் ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் ஜோதிர்லிங்க தேவஸ்தானம் பிரம்மகுரு. ஸ்ரீ கோடி தாத்தா சாமி மற்றும்ஏ.தியாகராஜ சிவாச்சாரியர் கலந்துகொண்டு கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பாக நடத்தி வைத்தனர் இதில் வேலூர் திருப்பத்தூர் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட தலைநகரம் சுற்றுவட்டார கிராமங்களில் வெங்கடாசமுத்திரம் ரங்காபுரம் குருமாபாளையம் அத்திமா பள்ளி மிட்டாளம் பாட்டு கரும்பூர் வீராங்குப்பம் தேவலாபுரம் துத்திப்பட்டு உம்ராபாத் ஆகியோர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இருந்தனர்.

    செய்தியாளர் : திருமலை 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad