வியாசர்பாடி போக்குவரத்து காவலர் சதீஷ்க்கு தொடர் பாராட்டுக்கள்
சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையில் ஓரமாக நின்றிருந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் அந்த ஆட்டோவை சோதனையிட்டனர். பின்னர் சுற்றுவட்டார பகுதியில் விசாரித்த போது முன்னுக்கு பின் தகவல் அளித்ததை தொடர்ந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால் ஆட்டோவின் எஞ்சின் மற்றும் சேசிஸ் எண்களைக் (Engine & Chassis Numbers) கொண்டு தீவிரமாகத் கண்டறிந்து துரித நடவடிக்கை மேற் கொண்ட போது : அது அண்ணாநகர் காவல் நிலைய எல்லையிலிருந்து காணாமல் போன வண்டி என்பது தெரியவந்தது உடனே வண்டியை மீட்டெடுக்க உதவினார்.
ஒரு சாதாரண ரோந்துப் பணியின் போதும் அலட்சியம் காட்டாமல் காணாமல் போன வாகனத்தை மீட்டெடுத்த அவரது இந்த உயர்ந்த கடமைத் தவறாத பண்பையும், துரிதமான புலனாய்வுத் திறனையும் பொதுமக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.






கருத்துகள் இல்லை