• சற்று முன்

    அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சொத்து மதிப்பு லட்சத்திலிருந் கோடியானது எப்படி


    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கை, மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தற்போது #சென்னை_உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு அமைச்சராவதற்கு முன்னதாக, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 23.36 லட்சமாக இருந்த நிலையில், 2006-ஆம் ஆண்டு அது ரூ. 6.86 கோடியாக உயர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இதில் சுமார் ரூ. 2 கோடிக்கும் அதிகமான வருமானத்திற்குச் சரியான கணக்கு காட்டப்படவில்லை எனக் கூறி, அவரது மனைவி, சகோதரர்கள் மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது தூத்துக்குடி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை, முறையான விசாரணைக்காக மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத்துறை தனது மனுவில் கோரியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad