கே.வி.குப்பம் அருகே 36 அடி தங்க வேல் முருகர் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது-
கே.வி.குப்பம் அருகே 36 அடி தங்க வேல் முருகர் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது-விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி*
வேலூர் மாவட்டம் கே. வி.குப்பம் அடுத்த பி.கே. புரம் பகுதியில் செல்வ விநாயகர் தங்க முருகன் மற்றும் ஆறுபடை வீடுகள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ஆலயத்தில் 36 அடி உயரம் கொண்ட தங்க வேல் முருகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் விநாயகர் ஆறுபடை முருகர் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டதுஇதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் யாகம் அமைத்து பட்டு வஸ்திரங்கள் தானிய வகைகள் மூலிகை பொருட்கள் வாசனை திரவியங்கள் மலர் வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள்கள் நடைபெற்றது.
பின்னர் கணபதி ஹோமம், கோ-பூஜை, அக்னி பிரதிஷ்டை, உக்த ஹோமம், மஹாபூர்ணாஹூதிக்கு பின் நாதஸ்வரங்கள் முழுங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க 36 அடி முருகர் சிலை மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்போது பக்தர் எழுப்பிய அரோகரா அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு செய்தியாளர் :ஆர். ஜே. சுரேஷ் குமார்
இதன் காணொளி காட்சியை reflect TN பார்க்கவும்






கருத்துகள் இல்லை