• சற்று முன்

    மாமன்னர் திருமலை நாயக்கரின் 443வது பிறந்தநாள் விழா

    மாமன்னர் திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் திருமலை நாயக்கரின் திருவுருவபடத்துக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் இனிப்புகள் வழங்கினார்.

    மாமன்னர் திருமலை நாயக்கரின் 443வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி அருகே திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்றத் உறுப்பினர்  கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாமன்னர் திருமலை நாயக்கரின் திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 


    இதனைத் தொடர்ந்து திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கரின் நினைவு மண்டபத்தில் மேற்கு ஒன்றிய மாணவரணி தலைவர் அருண்குமார் தலைமையில் கொடியேற்றி வைத்து

    தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருமலை நாயக்கரின் திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 


    இந்நிகழ்ச்சியில் கம்மவார் சங்கத்தினர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நகரச் செயலாளர்,ஒன்றிய செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு திருமலை நாயக்கரின் திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad