கண்டு கொள்ளாத வாலாஜா நகராட்சி மக்கள் கடும் அவதி
வாலாஜாபேட்டை பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது மட்டுமல்லாமல் சுற்றி உள்ள பகுதியில் தினசரி மார்க்கெட் இயங்கி வருகின்றன இந்த மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் சில்லறை வியாபாரம் மற்றும் மல்லிகை பொருட்கள் காலை 5.மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக உள்ளனர் மார்க்கெட் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன தண்டு மாரியம்மன் கோவில் நுழைவாயில் அருகில் கழிவுநீர் கால்வாய் அடைப்பட்டு ஏற்பட்டு சுமார் நான்கு நாட்களுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் வெளியேறியதால் துர்நாற்றம் வீசி வருவதாக வாலாஜா நகராட்சி ஆணையர் இளையராணி அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்ற பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்
ஆனால் இதனால் வரை சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருவதால் அப்பகுதியில் உள்ள தினசரி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பருவம் அதிகம் வாய்ப்புள்ளது இதனால் வரை நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அப்பகுதியில் உள்ள அனைவரது கோரிக்கையாக உள்ளது
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.






கருத்துகள் இல்லை