அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !
ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று சோளிங்கர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதன் அருகே அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் சி.கோபால்.Ex.M.P.,Ex.M.L.A., ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக தேர்தல் பிரிவு செயலாளர், மண்டல பொறுப்பாளருமான என்.ஜி.பார்த்திபன்.B.A.,B.L.,Ex.M.L.A., அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஆதம், நகரச் செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் சுரேஷ், கழக வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பழனி,, ஹரி உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.






கருத்துகள் இல்லை