பெரம்பலூர் அருகே குன்னம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலையில் பயணிகள் அவதி.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிறுத்தம் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் தற்போது சீர்குலைந்து பயனாளிகள் அமர்வதற்கு கூட இருக்கைகள் இல்லாமல் மதிப்பிரியர்கள் படை சூழ்ந்து அரட்டை அடிக்கும் பகுதியாக உள்ளது அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு இருந்தும் பேருந்து நிறுத்தத்தில் நாள் முழுவதும் மின் விசிறி ஓடுவதால் வீட்டுக்கு செல்லாமல் அங்கயையே படுத்து தூங்குகின்றனர் பயணிகள் கடும் அவதி படுகின்றனர்
மேலும்அந்த பகுதி முழுவதும் சுத்தம் இல்லாமல் குப்பை கூடாரமாக மாறி உள்ளது மேலும் பேருந்து நிறுத்தத்தில்கட்டப்பட்ட நான்கு கடைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மூடிய நிலையில் எந்த பயன்பாட்டிற்கும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால் அந்த பேருந்து நிலையம் முழுவதும் தூய்மையற்றும் காணப்படுகிறது மேற்கண்ட கடைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொது ஏலம் விட்டு திறந்து இருந்தால் மேற்கண்ட பயனாளிகள் நிழல் குடை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருக்கும் திமுக பிரமுகர்களுக்கு யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் நான்கு கடைகளையும் மூடி வைத்துள்ளனர் .மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பேருந்து நிலையத்தை ஆராய்ந்து அங்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை சரிசெய்து மூடிய நிலையில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்போது மக்களின் கோரிக்கை அப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் : ஆர்.வடமலை






கருத்துகள் இல்லை