• சற்று முன்

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது

     


    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது



    ராணிப்பேட்டை மாவட்டம்முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்மறியல் போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவதுதமிழக முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்அனைத்து அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராமஉதவியாளர்களுக்கு வழங்குவது போல் ரூபாய் 6750 - ஐ அகவிலைப்படியுடன் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு திட்ட ஊழியர்கள் மூலமாக வழங்கிட வேண்டும்.அரசாணையின்படி 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளருக்குசத்துணவு பதிவறு எழுத்தராக பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்பெண் சத்துணவு அமைப்பாளர்களுக்கு  கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமசேவிகா பதவி உயர்வு வழங்கப்படவில்லை உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்கருணை அடிப்படையிவான பணி நியமனம் ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும்ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு வருடம் முழுவதிலும் 12 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதைப் போலசத்துணவு ஊழியர்களுக்கும் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் 10. அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்குவது போல பெண் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்


    excutive reporter : R.J.Suresh Kumar

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad