மதனாஞ்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம் அண்ணா 57வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ்.ஞானவேலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா 57வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ்.ஞானவேலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.எம் பெருமாள் கோவிந்தம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி மகேந்திரன், ஜாப்ராபாத் ஒன்றிய கவுன்சிலர் முகமத் ஆசிப், ஒன்றிய நிர்வாகிகள் எம்.சி.ராமநாதன் ,எம். சி.தசரதன், தோ.குமார், சி. சிவகுமார், ஆர்.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே. ஞானசேகரன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் எம்.பி.பழனி, கிளை கழக செயலாளர்கள் பிரதிநிதிகள், BLA2, BDA மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : திருமலை






கருத்துகள் இல்லை