• சற்று முன்

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் தை பூசம் திருத்தேரோட்டம்


    கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள அருள்மிகு கழுகாசலமுர்த்தி திருக்கோவில் தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் தை பூசம் திருத்தேரோட்டம் - பக்தர்கள் அரோஹார கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள அருள்மிகு கழுகாசலமுர்த்தி திருக்கோவில், தென்பழனி என்று அழைக்கப்படும் குடவரை கோவிலான இங்கு கடந்த 23 ம் தேதி தை பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அதிகாலை 5மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வந்தது.மேலும் ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.


    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. பின்னர் கோரதத்தில் சண்டிகேஸ்வரர் வலம் வந்தார். எட்டையபுரம் அரண்மனை  வாரிசுதாரர் சைதன்யா ராஜா கழுகுமலை பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணியன், கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோஹாரா கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad