• சற்று முன்

    பேய்குளம் அருகே போதையில் வாலிபர் குளத்தில் மூழ்கி பலி!


    தூத்துக்குடிமாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் ரூபன் மகன் ஜெயசீலன்  22. அதே ஊரைச் சேர்ந்த பெனிடிக் மகன் செலக்சன் ,கனகராஜ் மகன் அசோக், தனபால் மகன் ஜேசுராஜ் இவர்கள் நால்வரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று விடுமுறை தினமாதலால் நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர். 

    இந்நிலையில் ஜெயசீலனுக்கு வாந்தி ஏற்பட்டதால் அருகில் உள்ள குளத்திற்கு சென்று முகம் கை கால்களை கழுவ சென்றுள்ளார் .இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் தவறி குளத்திற்குள் ஆழமான பகுதிக்குள் விழுந்துள்ளார். நால்வருக்கும் நீச்சல் தெரியாததால் செய்வது அறியாது திகைத்து நின்றனர். 

    இந்நிலையில் ஜெயசீலன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்தனர். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் தீயணைப்பு அலுவலர்கள் குளத்தில் இறந்த நிலையில்  ஜெயசீலனின் உடலை மீட்டனர். 

    இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ஜெயசீலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.மேலும் அவரது நண்பர்கள் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad