ஆம்பூர் வர்த்தக மையத்தில் சிவராத்திரி தாண்டவ தரிசனம் நாட்டிய நாடக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நாட்டியாலயா கலாமந்திரின் தாண்டவ தரிசனம் நாட்டிய நாடகம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் சிவராத்திரி தாண்டவ தரிசனம் நாட்டிய நாடக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் ஸ்ரீ நாட்டியாலயா கலாமந்திர் நாட்டிய பள்ளி சார்பாக 15-ஆம் ஆண்டு நிருத்யாஞ்சலி விழாவை முன்னிட்டு தாண்டவ தரிசனம் - தாருகாவனம் நாட்டிய நாடக நிகழ்ச்சியை பள்ளியின் இயக்குனர் முனைவர் சந்தியா செளந்தரராஜன் தலைமை வகித்தார். கலைமாமணி வி. ராம்ஜி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் இசைத் துறை தலைவர் முனைவர் ஆர். மாதவி, பாட்டும் பரதமும் இதழின் ஆசிரியர் ராம்கி என்கிற கே.ஆர். இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நாட்டிய நாடக நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாலையில் நடந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு காரைக்குடி ஸ்ரீ பாலகணேஷ் பரதநாட்டியப் பள்ளியின் நிறுவனர் எம். கணேஷ் அய்யர், இயக்குனர் டி. ஸ்ரீபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆம்பூர் ஸ்ரீ நாட்டியாலயா கலாமந்திர் இயக்குனர் எஸ். ஸ்ரீநிதி அய்யர் நாட்டிய நாடக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளியின் நிறுவனர் முனைவர் கே. செளந்தரராஜன் நன்றி கூறினார்.
நாட்டிய நாடக நிகழ்ச்சியில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட மாணவிகள் பங்கேற்று நடனமாடினர்.






கருத்துகள் இல்லை