முத்தையாபுரத்தில் பைக் விபத்தில் வாலிபர் பலி. மற்றொருவர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் அஜித்குமார் (22), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு, அஜித்குமார் ஸ்பிக் நகரில் உள்ள ஒரு கடையில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர் திரும்பியபோது, எதிரே வந்த மற்றொரு பைக் அஜித்குமாரின் பைக் மீது பலமாக மோதியது. இந்த நிலையில் தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து மற்றோரு நபர் பைக்கில் வந்த முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தனபால் (45) என்பவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்






கருத்துகள் இல்லை