சங்கரன்பாளையத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவிக்கு மூல மந்திர யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள்
சங்கரன்பாளையத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவிக்கு மூல மந்திர யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
வேலூர் மாவட்டம்,, சங்கரன்பாளையம், பிள்ளையார் கோயில் தெருவில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சரபேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவி மஹா மூல மந்திரயாகம் நடைபெற்றது இதில்
அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீசரபேஸ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவிக்கு சிறப்பு மஹா மூல மந்திரயாகம் மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது இதில் யாகத்தில் மிளகாய் மற்றும் பல்வேறு வகையான மூலிகைகள் பழங்கள் பட்சனங்கள் வஸ்திரங்களையும் யாக தீயிலிட்டு வேதமந்திரங்கள் முழங்க மஹாபூர்னஹதி நடைபெற்றது இதில் கேரளாவை சேர்ந்த ஸ்ரீ மாதா அம்பிகா சைதந்யமயீ மற்றும் ஆலய நிர்வாகி ஹரிதுளசிராமன் உள்ளிட்டோரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்துகொண்டு இயற்கை வளங்கள் செழித்து மழை பெருகி விவசாயம் செழிக்க மக்கள் நோயின்றி நலமுடன் உலகம் அமைதியாகவும் வாழ வேண்டி வழிபாடுகளை செய்தனர் பின்னர் ஸ்ரீசரபேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவிக்கு கலசாபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களை செய்து தீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்







கருத்துகள் இல்லை