Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தனர்.

    தமிழக அரசால் அண்மையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எழில் நகர் பகுதியில் ஜோலையார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சி மாவட்ட தொழில் மையம் மேலாளர் ரவி ஏற்பாடு செய்யப்பட்டு  மாவட்ட வங்கி மேலாளர் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளூர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர் 

    மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறினார் அதில்  பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்காக திட்ட மதிப்பீட்டில் 25% தமிழக அரசு மானியத்துடன் 5 கோடி வரையிலான தொழில் திட்டங்கள் வங்கிகள் மூலமாக வழங்கும் நீட்ஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    வங்கியிலிருந்து கடன் அனுமதி கிடைத்த பயனாளிகளுக்கு சென்னை வழியாக இரண்டு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது.இன்னும் பல்வேறு திட்டங்கள் மூலமாக மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதேபோல் தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி, அகர்பத்தி உற்பத்தி, இயந்திரம் ஆக்கப்பட்ட செங்கல் தயாரிப்பு, உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல் தொழில்கள், பழங்களை உலர வைத்தல், என பல்வேறு தொழில்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன 

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டங்கள் குறித்து எழில் நகர் பகுதியில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது 04179-299099 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா கேட்டுக்கொண்டார்.


    செய்தியாளர் : ஏ. ஒபேத் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad