• சற்று முன்

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தை அமாவாசையை முன்னிட்டு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!



    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டும், தை அமாவாசையை முன்னிட்டும் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது .குறிப்பாக குங்குமம் பிரசாதம் மற்றும் புஷ்பம், கல்கண்டு மற்றும் சர்க்கரைப் பொங்கல் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad