குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அஇஅதிமுக கல்லுக்கூட்டம் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் பச்சைமால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் திலக், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவ செல்வ ராஜன், கழக முன்னோடி எஸ்.எம். பிள்ளை, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, மற்றும் குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திர வர்ஷன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜான்சன், அம்மா ஆண்டனி, அமல் ராஜ், ஏசுதாஸ், ஆட்டோ ஆரோக், ஹோட்டல் ராதா, லூயிஸ், ஆகாஷ், ஆண்ட்ரூஸ், அபிஷேக், சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்






கருத்துகள் இல்லை