• சற்று முன்

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்.அமைச்சர் ஆர் காந்தி பேச்சு!!

    ராணிப்பேட்டை மாவட்டம்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் ராணிப்பேட்டையில் நடைபெற்ற. மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர் காந்தி பேசினார்.

    ராணிப்பேட்டை முத்து கடையில் திமுக மாவட்ட மாணவரணி மற்றும் ராணிப்பேட்டை நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர். வினோத் தலைமை தாங்கினார். நகர செயலாளர். பூங்காவனம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி , மாநில சுற்றுச்சூழனி துணை செயலாளர் வினோத் காந்தி, மாநில மாணவரணி துணை செயலாளர். தமிழ் கா.அமுதா ராசன் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஈஸ்வரப்பன், தலைமை கழக பேச்சாளர்கள் அன்புவாணன், கங்கா ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். 

    கூட்டத்தில் அமைச்சர் ஆர் .காந்தி பேசியதாவது ; -

    பெரியார் அண்ணா எண்ணத்தையும் திட்டங்களையும் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கட்சி பேதம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார் அவர் திமுக தலைவர் இல்லை. மக்கள் தலைவர் தலைவர் செய்த திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் . தாய் தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு அன்பு கரங்கள் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற எல்லா மகத்தான திட்டங்களை முதல்வர் கொடுத்துள்ளார். பிற மாநிலங்களில் முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களை பின்பற்றுகின்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக கடப்பேரி ஊராட்சி விருது கிடைத்துள்ளது. அந்த விருது பெற ஊராட்சி மன்ற தலைவர் டெல்லி சென்றுள்ளார். இப்படி அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் யாரோடு யார் சேர்ந்தாலும் எது நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 200 ஆண்டு காலம் ஆனாலும் திமுக தான் ஆட்சி. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி அல்ல 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர். ஆர். காந்தி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர். சுந்தரமூர்த்தி , மாவட்ட துணை செயலாளர். சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள். கண்ணையன், அசோகன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத் , ஹரிணி தில்லை , தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் BLT சிவா , நகர துணை செயலாளர். குமார், அப்துல்லா கிருஷ்ணன்  உள்பட மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பல பங்கேற்றனர். முன்னதாக உயிரிழந்த மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர். சிவஞானம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் நகர  மாணவரணி அமைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார். 

    ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad