77 ஆவது குடியரசு தின விழாவையொட்டிமாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா தேசிய கொடியை பறக்க வைத்தார்.
நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழாவையொட்டி ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா தேசிய கொடியை பறக்க வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட் ஆட்சியர்க்கு காவலரின் வீரவாள் மரியதை செலுத்தியப்பின் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவலர்களின் மிடுக்கான அணிவகுப்பினை பார்வையிட்டு காவல்துறை உட்பட அனைவரது மிடுக்கான அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக நாட்டிலேயே முதன்முதலில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து காவல் துறையில் சிறந்து விளங்கிய 32 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களையும் சிறப்பாக பணியாற்றிய 311 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கிய ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் 32 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மாவட்ட் வருவாய் அலுவலர் தனலிங்கம் உட்பட பலர் பங்கேற்றார்கள் இறுதியாக பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.









கருத்துகள் இல்லை