• சற்று முன்

    கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி! ராணிப்பேட்டை" கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி! ராணிப்பேட்டை பரபரப்பு!


    பகுதிநேர நியாயவிலைக்கடை சாலைவசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென நந்திமங்கலம் கிராமசபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கைராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் நந்திமங்கலம் கிராமத்தில் 77வது குடியரசு தின விழா முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 100 நாள் பணி அனைவருக்கும் வழங்க வேண்டும், 100 நாள் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலி பணத்தை வழங்க வேண்டும், புலிவலம் பானாவரம் மெயின் ரோட்டில் இருந்து நந்தியமங்கலம் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

     நந்திமங்கலம் கிராமத்தில் இருந்து கட்டாரிகுப்பம் வரை சேதம் அடைந்த ஜல்லிசாலை  வழியாக தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் விவசாயிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் இந்த சேதமடைந்த ஜல்லி சாலை சீரமைக்க வேண்டும்.நந்திமங்கத்திலிருந்து மயானத்துக்கு செல்லும் சாலை இடையே ஓடை கால்வாயில்  கல்வெட்டு அமைக்க வேண்டும்,இதனை தொடர்ந்து கரிக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தங்கினார்.

    கூட்டத்தில் 100 நாள் பணிகள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அந்தந்த பகுதியிலேயே பணி வழங்க வேண்டும்.கலைஞர் கனவு இல்லம் வீடு கேட்டு ஐம்பதுக்கு மேற்பட்டோர் கோரிக்கை வைத்தனர். கரிக்கல் மெயின் ரோட்டில் இருந்து இருளர் குடியிருப்பு, கரிக்கல் ரெண்டாடி வரை சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், இருளர் குடியிருப்பு பகுதிக்கு பகுதி ரேஷன் கடை அமைப்பு தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad