• சற்று முன்

    டபுள் என்ஜின் டப்பா என்ஜின் போஸ்டரால் வேலூரில் பரபரப்பு


    டபுள் என்ஜின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது"* அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டை காப்போம்"* என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு. 

    வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகாமையில்தேசிய ஜனநாயக  கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் புகைப்படம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்திய ரயில் இன்ஜினில் தொங்கிச் செல்வது போன்ற புகைப்படமும் டபுள் எஞ்சின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த போஸ்டரை யார் ஒட்டியது என்பது குறித்து எந்த விவரமும் இல்லாததால் வேலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad