• சற்று முன்

    'மருத்துவர்கள் நோயாளிகளிடம் கனிவு காட்ட வேண்டும் - நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் பேச்சு!



    தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் பரிவுடன் நோய் தன்மை அறிந்து நோயை முற்றிலுமாக குணப்படுத்த வேண்டும் என்று வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் இளம் மருத்துவர்களுக்கு அறிவுரை சொன்னார்.

    வேலூர் கிளையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் பொங்கல் விழா மருத்துவ சங்க அறக்கட்டளை அரங்கில்  நடைபெற்றது. மருத்துவ அறக்கட்டளை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை தலைவர் டாக்டர் கே. வெங்கட்ரமணன் வரவேற்றார். சங்க செயலாளர் டாக்டர் எம். ஜெகதீசன் சங்கத்தின் ஆண்டறிக்கை வாசிக்க சங்க பொருளாளர் டாக்டர் சி. சுபா'ஜீனி சங்க நதி நிலை பற்றி விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளையின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் கே. சதீஷ்குமார், செயலாளர் டாக்டர் எம். ஜெகதீசன், நிதி செயலாளர் டாக்டர் எஸ்.பி. வசந்தராஜ், துணை தலைவர் டாக்டர் எம். தானே'; குமார் ஆகியோருக்கு சங்கத்தின் வடக்கு மண்டல துணை தலைவர் டாக்டர் டி. பூபதி ஜான் பதவி பிரமாணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தி பேசினார்.

    இந்நிகழ்வில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் கௌரவ விருந்தினராக பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசுகையில்: எனது இளம் வயது முதல் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். வேலூரில் புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை நூறு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சிகிச்சை அளிப்பதில் முன்னிலை வகித்து வருகின்றது. பல மருத்துவமனைகள் உருவாகியுள்ளதற்கு சி.எம்.சி. மருத்துவமனை அடித்தளமாக உள்ளது பெருமைக்குறியது. உலகளவில் பல மருத்துவ நிபுணர்களை உருவாக்கிய பெருமை இம்மருத்துவமனைக்கு உண்டு.

    இன்றைய கால கட்டத்தில் மருத்துவ துறையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக சிறு மருத்துவமனையிலிருந்து பலநோக்கு சிறப்பு மருத்துவமனைகள் பெருமளவில் வந்துள்ளன. தீர்க்க முடியாக பல்வேறு நோய்களுக்கு மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சிகிச்சை முறைகள் உருவாகி உள்ளன.பல ஆண்டுகளுக்கு முன்பே டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தி ஒரு புரட்சியை உண்டாக்கினார்கள்அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவ சிகிச்சை முறையையே உலக அளவில் பின்பற்றிய நிலை மாறி இன்று இந்திய நாடு மருத்துவ துறையில் உலகிற்கே வழி காட்டும் நிலை உள்ளது.உலகில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தலை சிறந்த மருத்துவர்கள் இந்தியர்களாக இருப்பது பெருமைப்படதக்கது.

    இன்றளவில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சி மற்றும் சிறந்த மருத்துவ சேவை அளிப்பதின் காரணமாக இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு மருத்துவ துறையில் முதலிடம் பெற்றிருப்பது பெருமைக்குறியது. இன்றைய இளம் மருத்துவர்கள் தங்களை நாடி வரும் நோயாளிகளின் நோய் தன்மை மற்றும் அறிகுறிகளை பொறுமையாக கேட்டு தக்க சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முன்னதாக மருத்துவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நிகழ்வில் பொங்கலிடுதல், உறியடி, கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றது.

    நிகழ்வில் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர்கள் டாக்டர் சடகோபன், டாக்டர் தாமோதரன் மற்றும் டாக்டர் மதன் மோகன், டாக்டர் அருளாளன், டாக்டர் முரளி, டாக்டர் சேந்தன், டாக்டர் அருள் பாரி உள்ளிட்ட பல மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர் முடிவில் சங்க நிதி செயலாளர் டாக்டர் எஸ்.பி. வசந்தராஜ் நன்றி தெரிவித்தார்


     ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad