• சற்று முன்

    மாநகராட்சி அலட்சியம் ! வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

    புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் ஆலயங்கள், திருத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என பொதுமக்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.  சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பேருந்து  நிலையம் எதிரில்  சாலையில் குப்பை சேகரிக்கும் பெட்டி  உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். 

     இந்த சூழலில் அந்த குப்பை சேகரிக்கும் பெட்டி குப்பையை  முறையாக எடுக்காததால் குப்பை நிறைய சேர்ந்து விட்டது.  

    கால்நடைகள் தெருவில் சுற்றினால் அபராதம் என்று அறிவித்த நிலையில் கால்நடை ஒன்று அந்த குப்பையை எடுத்து சாலையில் போட்டு போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தியது.  முக்கிய பிரதான சாலையான சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பேருந்து நிலையம் அருகில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது சாக்கு முட்டையில் இருந்த கட்டிட கழிவுகளை அது எடுத்து மாடு உதறியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானர்கள் . 



     இச்சம்பவத்தை அருகில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்  காவல்துறையினரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்பது +குறிப்பிடத்தக்கது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad