பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் எஸ் ஐ ஆர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம்: வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் , சாத்கர் ஊராட்சியில் எஸ் ஐ ஆர் தீவிர திருத்தப்பணி பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சாத்கர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். சங்கீத பிரியா சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. நீலா கபில் முன்னிலை வகித்தார். பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் அங்கன்வாடி பள்ளி ஆசிரியைகள் கே. ஸ்ரீதேவி கேசவன், ஜெயஸ்ரீ ஸ்டெல்லா மேரி, அங்கன்வாடி பள்ளி உதவியாளர் மைதிலி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர் .முடிவில் ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ஏ. மணிவண்ணன் நன்றி கூறினார் .






கருத்துகள் இல்லை