வேப்பங்கனேரி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா!
வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அருகேயுள்ள வேப்பங்கனேரி கிராமம், கலைஞர் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக சாந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில், ஆலய நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு ஸ்ரீ முத்து மாரியம்மனை வழிபட்டு, அருளாசி பெற்றனர். குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான ஸ்ரீகாளியம்மன் ஆலயத்தின் பிரதான அர்ச்சகரான ஈசான்ய சிவம் பிரம்மஸ்ரீ. நீ.ஜெயப்பிரகாஷ் சர்மா பூஜை, புனஷ்காரம் செய்யப்பட்டு, மந்திரங்கள் ஒலிக்க, மங்கல நாதம் முழங்க, மகா கும்பாபிஷேக விழா சிறப்பான முறையில் நடந்தேறியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை