சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 -26 ஆம் கீழ் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 506 மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, பள்ளி தலைமையாசிரியர் ஜெயலதா, மற்றும் ஆசிரியர்கள் மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை