9 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை வில்வித்தை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் குடியாத்தம் எஸ் .கே. ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் 9 தங்கப்பதக்கம் ,ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். நித்தின் இரண்டு தங்கப்பதக்கம், தஷ்யன் இரண்டு தங்கப்பதக்கம், ஷஸ்வந்த் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம், சபரிநாதன் ஒரு தங்கப்பதக்கம், ரித்துல் ஒரு தங்கப்பதக்கம், லோகேஷ் ஒரு தங்கப்பதக்கம், ஷிருஷ்டிகா ஒரு தங்கப்பதக்கம் ஆக மொத்தம் 10 பதக்கங்களை பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா குடியாத்தம் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. மேலும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜே.தினகரன், வேலூர் மாவட்ட கள வில் வித்தை சங்க தலைவர் எஸ்.சத்தியன், எஸ். எஸ். குழும தலைவர் எஸ். சோபன் பாபு, கள்ளபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணா , ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். கிருஷ்ணசாமி பள்ளியின் நிர்வாகி லில்லி சுப்பிரமணி முன்னிலையில் , எஸ்.கே .ஸ்போர்ட்ஸ் அகடாமியின் தலைமை பயிற்சியாளர் முனைவர் எஸ்.சாரதி, முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். குறிப்பாக 70, மாணவ, மாணவிகளுக்கு வில் வித்தை, இறகுப்பந்து, தடகளம், பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உறுதுணையாக இருந்த பார்த்திபன் மற்றும் ரமேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.






கருத்துகள் இல்லை