• சற்று முன்

    கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன்


    கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் கோவில்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 51 வது மாதம் அன்னதானம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் 



    ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கமலேஷ்வர் மேட்ச் ஒர்க்ஸ் தொழிலதிபர்  நடராஜன் வரவேற்றார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி பிள்ளையார் நத்தம் விஏஓ மந்திர சூடாமணி பொங்கல் பிரசாதம் வழங்கினார். 

    அன்னதானத்தை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பராசக்தி மேட்ச்  இண்டஸ்ட்ரீஸ் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராம், சுதர்சன் டிரேடிங் கம்பெனி தனபால், சங்கர் மேட்ச் கம்பெனி கொல்லம் சேகர், கே கே ஆர் ஸ்வீட்ஸ் ஆக்ரா காளிராஜ், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி ஆகியோர் சிறப்பு  அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன்,  தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன், மிலிட்டரி சந்திரசேகர், தங்கராஜ், எஸ்பி பாண்டியன், பாலமுருகன், சண்முகசுந்தரம், பசுமை இயக்கம் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விக்னேஸ்வரி  எண்டர்பிரைசஸ் தொழிலதிபர் அசோக் நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad