கோவில்பட்டியில் உலக சாதனை முயற்சியாக 1800 நொடிகளில் 3000 முறை தொடர்ந்து பஞ்ச் செய்த மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் உள்ள விஸ்வகர்மா மீட்டிங் மஹாலில் வைத்து சவுத் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு சார்பில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு உலக சாதனை முயற்சியாக 1800 நொடிகளில் 3000 முறை தொடர்ந்து பஞ்ச் செய்த சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தற்காப்பு கலையன பஞ்ச் செய்தனர்
தொடர்ந்து 1800 நொடிகளில் 3000 முறை செய்த அசத்தினர் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி செயலாளர் பாலமுருகேசன்,சவுத் ஆசியா புக் ஆப் ரெக்கார்டுக்காக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







கருத்துகள் இல்லை