களவு போன 57 செல்போன்கள் கண்டபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்
2025 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் தனது செல்போன் தொலைந்தது சம்பந்தமாக மனுதாரர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் CEIR PORTAL மூலம் தொலைந்த செல்போன்களின் IMEI வைத்து, செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு இன்று 22.07.2025-ம் தேதி ரூ.9,60,286 (ரூபாய் ஒன்பது லட்சத்து அறுபதாயிரத்து இருநூற்று என்பத்தி ஆறு) மதிப்புள்ள 57 தொலைந்த செல்போன்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ. சுஜாதா, அவர்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஒப்படைத்தார். இதுவரை CEIR PORTAL மூலம் 1259 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது






கருத்துகள் இல்லை